முசாபர் நகர்,
உத்தரபிரதேச மாநிலம் புதானாவில் உள்ள பஸ் நிலையத்தில் சம்பவத்தன்று 24 வயதான இளம்பெண் ஒருவர், தன்னுடைய சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், லிப்ட் கொடுப்பதாக கூறி அந்த இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஒரு காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு அந்த இளம்பெண்ணை 3 பேரும் மாறி மாறி கற்பழித்தனர்.
இதுகுறித்து அந்த இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கற்பழிப்பில் ஈடுபட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.