தேசிய செய்திகள்

கேரளா: விலை உயர்ந்த பூனைகளை திருடிய வாலிபர் கைது..!

செல்லமாக வளர்க்கும் பிராணிகளை விற்பனை செய்யும் கடையில் 3 விலை உயர்ந்த பூனைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கேரளா,

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கார்கூந்தல் பகுதியில் வசிப்பவர் தங்கப்பன் (வயது 38). இதே பகுதியில் ஜோஸ் என்பவர் செல்லப்பிராணிகளை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கிளி, அணில், பறவை, பூனைகள் உட்பட பல உயிரினங்களை விற்பனை செய்து வருகிறார்.

இவருடைய கடையில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூன்று பூனைகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து இடுக்கி போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தியதில் பூனைகளை கடத்திக் கொண்டு சென்றது தங்கப்பன் என தெரியவந்தது.

அதன் பேரில் போலீசார் தங்கப்பனை பிடித்து அவரிடம் இருந்து 3 பூனைகளையும் மீட்டனர். அவர் திருடிய மூன்று பூனையும் 27 ஆயிரம் ரூபாய் மதிப்பு உள்ளது என கடை உரிமையாளர் தெரிவித்தார். மேலும் பூனையை திருடிய தங்கப்பனை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை