தேசிய செய்திகள்

போதைப்பொருள் விற்ற வாலிபர் கைது

மங்களூரு அருகே போதைப்பொருள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விற்பனை அதிகரித்துவிட்டது. இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் போலீசார் மங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கங்கனாடி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது படில் பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் பையுடன் சந்தேகம் இடமாக சுற்றி வந்தார். அந்த வாலிபரை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் வாலிபர் கங்கனாடியை அடுத்த குலசேகரா கிராமத்தில் உள்ள கோகர்ணாரோடு பகுதியை சேர்ந்த ஹர்ஷித் ஷெட்டி (வயது 29) என்று தெரியவந்தது.இதையடுத்து அவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். பையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 25 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹர்ஷித் ஷெட்டியை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கைதான ஹர்ஷித் ஷெட்டி மீது கங்கனாடி, உல்லால், மங்களூரு, உடுப்பியில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் என 9 வழக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிட தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு