தேசிய செய்திகள்

'தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை' - ஒய்.எஸ்.சர்மிளா அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா, தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

வாக்குகள் பிரிவதை தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்