தேசிய செய்திகள்

விமானத்தில் நடிகை சாயிரா வாசிமிற்கு பாலியல் தொல்லை, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மெகபூபா முப்தி

விமானத்தில் நடிகை சாயிரா வாசிமிற்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

ஸ்ரீநகர்,

தங்கல் அறிமுகமான நடிகை சாயிரா வாசிமிற்கு (வயது 17). விமானத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகையின் வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏர் விஸ்டாரா விமான நிறுவனம், நடிகை சாயிரா வாசிமிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகிறோம். இப்படிப்பட்ட நடத்தையை சகித்துக்கொள்ள முடியாது என விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நபர்க்கு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. மும்பை போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சாயிரா வாசிம் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில் அவர் விமான பயணத்தின்போது பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து காஷ்மீர் முதல்மந்திரி மெகபூபா முப்தி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், பெண்களுக்கு எதிரான தொல்லை, குற்றம் போன்றவற்றில் விரைவாகவும், திறம்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 மகள்களுக்கு நான் தாய் என்ற வகையில் சாயிராவுக்கு நடந்திருப்பது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாக குறிப்பிட்டு உள்ளார்.

சம்பந்தப்பட்ட பயணியை விஸ்டாரா விமான நிறுவனம், போலீசுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கூறிஉள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு