தேசிய செய்திகள்

மூணாறில் 3-வது நாளாக ஜீரோ டிகிரி குளிர் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரள மாநிலம் மூணாறில் 3-வது நாளாக ஜீரோ டிகிரி குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மூணாறு,

கேரள மாநிலம் மூணாறில் 3-வது நாளாக ஜீரோ டிகிரி குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலாத் தலமான மூணாறில், வெப்பநிலை படிப்படியாக குறைந்து 2 நாட்களுக்கு முன்பு, ஏழுமலை, தேவிகுளம் எஸ்டேட் பகுதிகளில் ஜீரோ டிகிரியாகப் பதிவானது. இதனால் கடந்த 3 நாட்களாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முதியவர்களும் சிறுவர்களும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பச்சைத் தேயிலை தோட்டங்கள் மெல்லிய பனியால் மூடப்பட்டு, வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன.

மூணாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பகலில் 20 முதல் 25 டிகிரியாக வெப்பநிலை உள்ளது. புத்தாண்டு சீசன் முடிந்துள்ள நிலையில், மீண்டும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு