தேசிய செய்திகள்

கான்பூரில் மேலும் 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் மேலும் 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தினத்தந்தி

கான்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 23-ந் தேதி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்து மேலும் சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்திய விமானப்படை நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களிடையே மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, லக்னோவில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், 30 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கான்பூர் மாவட்டத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 45 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள் ஆவர். நோய்ப்பரவலை தடுக்க கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்