புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை சில மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. சில மாநிலங்கள், அபராத தொகையை குறைத்து அமல்படுத்தி உள்ளன. இந்நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
மோட்டார் வாகன சட்டத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமல்படுத்துவது மாநில அரசுகளின் விருப்பம். இச்சட்டத்தை அமல்படுத்த இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய வேண்டி உள்ளது. இதற்காக மாநில அரசுகளிடம் கருத்து கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.