செய்திகள்

குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் 35 வழக்குப்பதிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேட்டி

குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் 35 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.

தினத்தந்தி

நாகர்கோவில்,

குமரி மாவட்ட காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சைல்டுலைன் அமைப்பு ஆகியன இணைந்து குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் பற்றி (போக்சோ சட்டம்-2012) விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கை நேற்று நாகர்கோவிலில் நடத்தின.

ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள அல்போன்சா பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி ஆயுதப்படை முகாம் மைதானம் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

போக்சோ சட்டம்

முன்னதாக பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் போக்சோ சட்டத்தின் பாதுகாப்பு, குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, புகார் கொடுப்பவர்களுக்கான பாதுகாப்பு போன்ற விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், குளச்சல் உதவி சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் விளக்கி பேசினர். முடிவில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி நன்றி கூறினார்.

இதில் போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள், சைல்டுலைன் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

35 வழக்குகள்

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

போக்சோ சட்டப்படி புகார் கொடுப்பவர்களின் அடையாளத்தை காட்டாமல் போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்பதை மாணவ- மாணவிகளுக்கு தெரிவிப்பதற்காகவும், பொதுமக்களுக்கு இந்த சட்டத்தின் பாதுகாப்புகள் மற்றும் நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காகவும் இந்த பேரணி நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். போக்சோ சட்ட வழக்குகளை ஐகோர்ட்டு ஆய்வு செய்து வருகிறது. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எவ்வளவு சீக்கிரம் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியுமோ? அதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்