செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது. #IPL2019 #SRHvRCB

தினத்தந்தி

பெங்களூரு,

விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 54-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது.

ஐதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மாவுக்கு பதிலாக யூசுப் பதான் சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் மூன்று மாற்றமாக ஸ்டோனிஸ், பவான் நெகி, கிளாசென் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹெட்மயர், கிரான்ட்ஹோம், வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தனர்.

இறுதியில் உமேஷ் யாதவ் 9(4) ரன்களும், கிராண்ட் ஹோம் 3(4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூர் அணி 19.2 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக கலில் அகமது 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், ரஷித் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெற்றது.

ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பெங்களூருவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. 8-வது தோல்வியை தழுவிய ஐதராபாத் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகி விட்டது. மும்பைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால் மட்டுமே ஐதராபாத் அணிக்கு வாய்ப்பு உருவாகும்.


தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை