செய்திகள்

நிலைப்பின்மைக்கு டிரம்பே காரணம் - ஈரான் குற்றச்சாட்டு

ஈரான், அமெரிக்க அதிபர் டிரம்பே நிலைப்பின்மைக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

துபாய்

டிரம்பின் முரண்பாடான, ஒருதலைபட்சமான கொள்கைகள் உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளனஎன்ற ஈரான் தன்னை ரௌடி நாடாக சித்தரிக்கும் அமெரிக்க அதிபரின் வார்த்தைகளையும் நிராகரித்தது.

அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து ஈரானை தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாக சித்தரிக்கிறார்.

கடந்த வியாழன் அன்று டிரம்ப், வட கொரியா, ஈரான் மற்றும் சிரியா போன்ற ரௌடி நாடுகள் தீவிரவாதத்தை ஆதரித்து வருகின்றனர். இதனால் புதிய ஆபத்துகள் நேரலாம் என்றார்.

அமெரிக்காவின் கூட்டாளியான சவூதி அரேபியா ஈரானில் 18 பேர் இறந்து போன தாக்குதலுக்கு காரணம் என்றும் ஈரான் குற்றஞ்சாட்டியது. சவூதி இதை மறுத்துள்ளது.

இந்நிலையில் ஈரானை டிரம்ப் கடுமையாக விமர்சித்தாலும் மேற்கத்திய நாடுகளுடன் அது செய்து கொண்ட அணு ஆயுத உற்பத்தி ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்வதாக அறிவிக்கவுள்ளார் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.