செய்திகள்

அமெரிக்க வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். கிளை தலைவர் பலி

அமெரிக்க கூட்டு படையின் வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான் கிளை தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 11ந்தேதி அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் ஐ.எஸ். அமைப்பு தலைவர் அபு சையத் கொல்லப்பட்டார் என அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.

இவர் ஈராக் மற்றும் சிரியாவுக்கான எமீராகவும் இருந்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த தாக்குதலில் அந்த அமைப்பின் மற்ற உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தனது அமைப்பினை விரிவுபடுத்த இருந்த திட்டமும் இதனால் தடைப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படையை வழி நடத்தி செல்லும் தளபதி ஜான் நிக்கல்சன், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் அழியும் வரை நாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பிற்கு புகலிடம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.