செய்திகள்

சந்திரயான்-3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன்

ராக்கெட் ஏவுதளத்திற்காக குலசேகரப்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

தினத்தந்தி

பெங்களூரு,

இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சந்திரயான்-3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். சந்திரயான்-3 திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுக்கு ஜனவரி 3 ஆம் வாரத்தில் பயிற்சி தொடங்கும்.

சந்திரயான்-2 திட்டத்தில் அனுப்பப்பட்டு சிறப்பாக செயல்படும் ஆர்பிட்டர் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு தகவலை அனுப்பும். வேகமாக சென்று நிலவின் மீது மோதியதால், லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை. ராக்கெட் ஏவுதளத்திற்காக குலசேகரப்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்