செய்திகள்

இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நேற்று மாலை 3.25 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இந்த ராக்கெட் மூலம் இந்தியாவுக்கு சொந்தமான பூமி கண்காணிப்பு செயற்கை கோளான ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கை கோள் மற்றும் வணிக ரீதியிலான வெளிநாடுகளைச் சேர்ந்த 9 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி என்று இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்த திட்டத்தில் பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியாவிற்கு மேலும் பெருமை கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த வெற்றியின் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு