செய்திகள்

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு: தரையிறங்கிய போது சறுக்கிய டெல்லி விமானம் - 201 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு காரணமாக, தரையிறங்கிய போது டெல்லி விமானம் சறுக்கியதில் 201 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பானில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் விமான நிலையங்களின் ஓடுபாதையில் பனித்துகள்கள் குவிகின்றன.

இந்த நிலையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் டெல்லியில் இருந்து டோக்கியோவுக்கு புறப்பட்டு சென்றது. இதில் பயணிகள் 201 பேர் இருந்தனர்.

இந்த விமானம் டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையில் கொட்டி கிடந்த பனித்துகள்களில் சிக்கி சறுக்கியது. இதையடுத்து விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தினார். உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதன் மூலம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்