தென்காசி,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 3-வது ஆண்டு நினைவு தினம் நேற்று தென்காசி, குற்றாலம் பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது.
தென்காசி பழைய பஸ்நிலையம் அருகில் ஜெயலலிதாவின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. நகர செயலாளர் சுடலை தலைமையில் கட்சியினர், ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
குற்றாலம் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் கணேஷ் தாமோதரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். முன்னாள் நகரசபை தலைவர் மோகனகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு நகர செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அங்குள்ள வார்டுகள் தோறும் அந்தந்த வார்டு நிர்வாகிகள் சார்பில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அச்சன்புதூரில் அ.தி.மு.க. பேரூர் கழகம் சார்பில் நகர செயலாளர் சுசீகரன் தலைமையில் அக்கட்சியினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பழைய பஸ்நிலையம் முன்பு அலங்கரித்துவைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்சிக்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.