செய்திகள்

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி ரகுபர் தாசை எதிர்த்து மந்திரி போட்டி

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில், முதல்-மந்திரி ரகுபர் தாசை எதிர்த்து மந்திரி போட்டியிட உள்ளார்.

தினத்தந்தி

ஜாம்ஷெட்பூர்,

பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. முதல்-மந்திரி ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காத உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மந்திரி சர்யு ராய், ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் முதல்-மந்திரி ரகுபர் தாசை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியிலும் தான் போட்டியிடப் போவதாகவும், ஆனால் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில்தான் தீவிர கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது