செய்திகள்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 மறுஆய்வு மனுக்கள்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 நிலம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 9-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த நிலத்தை ராம் லல்லாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அயோத்தியில் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு மத்திய அரசு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி ஜமியத் உலமா இ இந்த் அமைப்பின் தலைவர் மவுலானா சையது அஷாத் ரஷிதி கடந்த 2-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். இவர் அயோத்தி வழக்கின் பிரதான மனுதாரரான எம்.சித்திக்கின் சட்டபூர்வ வாரிசு ஆவார்.

இந்த நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு கோரி மவுலானா முப்தி ஹஸ்புல்லா, முகமது உமர், மவுலானா மக்பூசுர் ரகுமான், மிஷ்பகுத்தீன் ஆகிய 4 பேர் நேற்று தனித்தனியாக மனு தாக்கல் செய்து உள்ளனர். இவர்கள் முன்பு இந்த வழக்கில் மனுதாரர்களாக இருந்தவர்கள் ஆவார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்