இந்திய திரையுலகில் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என பாராட்டப்படும் கே.பாக்யராஜ், படங்களை தேர்வு செய்து முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது அவர், யாரது என்ற புதிய படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை டைரக்டு செய்யும் நம்பிராஜ் சொல்கிறார்:-
சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்த மூன்று பேர்களால் பொதுமக்கள் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். மூன்று பேர்களையும் கைது செய்ய முடிவு செய்கிறார், போலீஸ் அதிகாரி. இந்த நிலையில், அந்த மூவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
கொலையாளி யார், கொலைகளுக்கான காரணம் என்ன? என்ற கேள்விகளுடன் விசாரணையை தொடங்குகிறார், மூத்த போலீஸ் அதிகாரி. அப்போது போலீசார் அதிர்ச்சி அடையும் வகையில், ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன? என்பதையும், பாக்யராஜ் கதாபாத்திரத்தையும் சஸ்பென்சாக வைத்து இருக்கிறோம்.
படத்தை தயாரித்திருப்பதுடன், போலீஸ் அதிகாரியாக நடித்தும் இருக்கிறார், ஏகனாபுரம் ரவி. சென்னை, திண்டுக்கல், சின்னாளப்பட்டி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இருக் கிறோம்.