செய்திகள்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் திருவிழாவுக்காக குளத்தை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் திருவிழாவுக்காக குளத்தை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில், நீரின் அடியில் இருந்து அத்தி மரத்தினால் செய்யப்பட்ட அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

இதற்காக அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி தூர்வாரி அத்திவரதர் சிலையை வெளியே எடுக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக குளத்தை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.

குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொள்ள சென்னை தனியார் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள், கோவில் குளத்தில் உள்ள நீரின் அளவு, சேற்றின் அளவு, குளத்தின் ஆழம் மற்றும் நீரை வெளியேற்றி குளத்தை தூர்வாரும் எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து ஆய்வு செய்தனர். கோவில் நிர்வாக அதிகாரி தியாகராஜன், மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் இணைந்து ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு