திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த மாநில சிவசேனா கட்சி அழைப்பு விடுத்து இருந்தது.
ஆனால் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் இன்று புயல் காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருப்பதால் தங்களது முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிவசேனா கட்சி நேற்று அறிவித்தது.
இதுகுறித்து மாநில நிர்வாகிகள் கூறுகையில் முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றாலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.