செய்திகள்

கொரியா எல்லை: அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்தம்

கொரியா எல்லையில் நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி


* அமெரிக்கா மற்றும் சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக சீன துணை பிரதமர் லியு ஹி, அமெரிக்க நிதித்துறை மந்திரி ஸ்டீவென் மனுசின் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

* கொரியா எல்லையில் நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் விமானப்படை போர் ஒத்திகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தையை விரைந்து நடத்திட நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* பொலிவியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* ஆப்கானிஸ்தானின் லக்மன் மாகாணத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி சோதனையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தளபதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு