கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர், மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மோடி ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று கூறினார். ஆனால் விவசாயிகளின் எந்த கோரிக்கையையும் அவர் நிறைவேற்றவில்லை. மாறாக விவசாயிகளின் தற்கொலை தான் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடியை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்வதென நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முடிவு செய்திருந்தனர். அந்த அடிப்படையில் நானும் மனு தாக்கல் செய்துள்ளேன். அவ்வாறு அவர் கூறினார்.