செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

அரியலூர்,

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வதம்பி தலைமை தாங்கினார். மருதவாணன் முன்னிலை வகித்தார். சுதாகர் வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் சேகுவாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் அவரிடம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் வேட்பு மனு அளித்தனர். கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலக்கியதாசன் நன்றி கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்