திருப்பத்தூர்,
திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி, மடவாளம், பொம்மிகுப்பம், கதிரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 26 சுய உதவி குழுக்களுக்கு இந்தியன் வங்கி மற்றும் பீரிடம் பவுன்டேஷன் மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி வெங்களாபுரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மைக்ரோ இந்தியன் வங்கி மேலாளர் சுமலதா தலைமை தாங்கினார். இயக்குனர் எழிலரசி வரவேற்றார். வங்கி மேலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் வி.என்.மாயா கலந்துகொண்டு, 26 சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 95 லட்சம் கடனுதவி வழங்கினார். இதில் தொழில் துறை மாவட்ட வங்கி மேலாளர் பிரேமா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இயக்குனர் ஏ.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.