செய்திகள்

சத்ருகன்சின்கா காங்கிரசில் இணைந்தார்! பாஜக ஒருவரின் கட்சி என விமர்சனம்

பாஜகவில் இருந்து விலகிய சத்ருகன் சின்கா, காங்கிரஸ் கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வான சத்ருகன் சின்கா, அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். பிரதமர் மோடிக்கு எதிராக அவ்வப்போது கடுமையான கருத்துக்களையும் வெளியிட்டு வந்த சத்ருகன் சின்கா, சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையப் போவதாக அறிவித்து இருந்தார். கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சத்ருகன் சின்கா சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் முன்னிலையில், அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த சத்ருகன் சின்கா, பாஜக ஒருவரின் கட்சி எனவும் விமர்சித்தார். சத்ருகன் சின்கா, பாட்னா சாகிப் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என தெரிகிறது. இந்த தொகுதியில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்