செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 3,427 பேருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் மேலும் 3,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள கொடிய கொரோனா இந்தியாவையும் புரட்டி போட்டுள்ளது. இந்திய அளவில் மராட்டியம் தான் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இங்கு கொரோனா புதிய வேகமெடுத்து பரவி வருகிறது.

இந்த நிலையில் இன்று மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,04,568 ஆக அதிகரித்து உள்ளது.

இதே போல மாநிலத்தில் ஒரே நாளில் 113 பேர் நோய் தொற்றுக்கு பலியானார்கள். மாநிலத்தில் இதுவரை ஆட்கொல்லி நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 830 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை