செய்திகள்

ஆடிப்பூர விழாவையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம்

ஆடிப்பூர விழாவையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மன்னார்குடி,

தமிழகத்தில் தலைசிறந்த வைணவ தலங்களில் ஒன்றாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி செங்கமலத்தாயார், ராஜகோபாலசாமியுடன் அருள்பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில் புறப்பாடு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தேரோட்டம்

இந்த நிலையில் ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் செங்கமலத்தாயார் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். விழாவில் கோவில் செயல் அலுவலர் சங்கீதா மற்றும் பணியாளர்கள், மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...