செய்திகள்

உலகின் மிக நீளமுள்ள சாண்ட்விச்சை தயாரித்து மெக்சிகோவில் சாதனை

உலகில் மிக நீளமுள்ள சாண்ட்விச்சை தயாரித்து மெக்சிகோவில் சாதனை செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

மெக்சிகோ நாட்டில் ஆண்டுதோறும் பாரம்பரிய சாண்ட்விச் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தோர்டா அல்லது சாண்ட்விச் திருவிழா என அழைக்கப்படும் இதில் கலந்து கொள்வதற்காக இந்த வருடம் நாடு முழுவதும் இருந்து சாண்ட்விச் தயாரிக்கும் சமையற்கலை நிபுணர்கள் மெக்சிகோ சிட்டியில் குவிந்தனர்.

அவர்கள் 3 நிமிடங்களில் 236 அடி நீளம் கொண்ட சாண்ட்விச் ஒன்றை தயாரித்து முடித்தனர். இதற்காக, ஆயிரம் பிரட் துண்டுகள், மயேனீஸ், தக்காளி, வெங்காயம், கேஸ் மற்றும் இறைச்சி துண்டுகளை வைத்து இந்த சாண்ட்விச் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த சாண்ட்விச், துண்டுகளாக்கப்பட்டு பார்வையாளர்கள் உண்பதற்காக வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் 124 அடி நீளம் கெண்ட சாண்ட்விச் தயாரிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. இந்த சாதனை தற்பேது முறியடிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது