காபூல்,
கண்ணிவெடிகள் புதைத்து வைத்துள்ள சாலையில் போலீசார் நேற்று வேனில் சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் அதைக்கண்டு, தொலைவில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் முறையில் கண்ணிவெடிகளை வெடிக்க வைத்தனர்.
அதில் போலீஸ் வேன் சிக்கி உருக்குலைந்து போனது. அந்த வேனில் பயணம் செய்த ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து படுகாயம் அடைந்த போலீசாரை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கண்ணி வெடி தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி, எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.