செய்திகள்

நாட்டின் அதிவேக ரெயிலின் 2வது சோதனை ஓட்டத்தில் மீண்டும் கற்கள் வீச்சு

நாட்டின் அதிவேக ரெயிலின் 2வது சோதனை ஓட்டத்தில் மீண்டும் கற்கள் வீசப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

டிரெயின் 18 என்ற நாட்டின் அதிவேக ரெயிலானது சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் 20ந்தேதி நடந்த இதன் சோதனை ஓட்டத்தில் டெல்லி முதல் ராஜ்தானி வரையான வழித்தடத்தில் மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் பயணித்தது. இதனால் சதாப்தி ரெயில்களுக்கு பதிலாக இவை அதிவேக ரெயில்களாக இயக்கப்படும் என கூறப்பட்டது.

நாட்டில் என்ஜின் இல்லாமல் இயங்கும் முதல் ரெயில் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த ரெயில் டெல்லி மற்றும் வாரணாசி இடையே பயணிக்கும்.

இந்த நிலையில், ரெயிலின் 2வது சோதனை ஓட்டம் நேற்றிரவு நடந்தது. ரெயிலானது சகுர்பஸ்தி நகரில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி நோக்கி புறப்பட்டு சென்றது. இதில் ரெயில் சதர் பகுதி அருகே வந்தபொழுது, அதன் முன்புறம் இருந்து 2வது பெட்டியின் மீது கற்கள் வீசப்பட்டு உள்ளன. ரெயிலில் ஆர்.பி.எப். போலீசார் பாதுகாப்பிற்கு இருந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 20ந்தேதி டெல்லி முதல் ஆக்ரா வரையில் நடந்த சோதனை ஓட்டத்திலும் ரெயிலின் மீது கற்கள் வீசப்பட்டு ஜன்னலின் கண்ணாடிகள் உடைந்தன. இந்நிலையில், இன்று நடந்த 2வது சோதனை ஓட்டத்திலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை