செய்திகள்

எம்.எல்.ஏ. கருணாஸுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ்?

எம்.எல்.ஏ. கருணாஸுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை

அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் அ. தி.மு.க அரசை விமர்சிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க எம்.எல். ஏ ஒருவர் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து சபாநாயகர் தனபால் சட்டத்துறை அமைச்சர் சண்முகத்துடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. கருணாஸுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வருக்கு எதிராக பேசியது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கருணாஸ் விவகாரம் தொடர்பாக முதல்வரும், துணை-முதல்வரும் காலையில் சபாநாயகரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது