செய்திகள்

கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் சிறுவர்களுக்கு எதிராக 350-க்கும் மேற்பட்ட குற்றங்கள்

கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் சிறுவர்களுக்கு எதிராக 350-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்து உள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

குழந்தைகளுக்கான உரிமை மற்றும் நீங்கள் என்ற அமைப்பு, இந்தியாவில் கடந்த ஆண்டில் சிறுவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் ஆய்வு செய்துள்ளது. இதில், கடந்த ஆண்டு 1,28,531 குற்றங்கள் சிறுவர்களுக்கு எதிராக பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அந்தவகையில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 350-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்து உள்ளன.

கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்திலும் இந்த குற்றங்கள் அதிக அளவில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தை திருமணம் 50 சதவீதம் அளவுக்கும், ஆன்லைன் அத்துமீறல் வழக்குகள் 400 சதவீதம் அளவுக்கும் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

மாநிலங்கள் நிலவரத்தை பொறுத்தவரை மத்திய பிரதேசம் (13.2 சதவீதம்), உத்தரபிரதேசம் (11.8 சதவீதம்), மராட்டியம் (11.1 சதவீதம்), மேற்கு வங்காளம் (7.9 சதவீதம்), பீகார் (5.1 சதவீதம்) ஆகிய 5 மாநிலங்கள் மட்டுமே மொத்த வழக்குகளில் சுமார் 50 சதவீதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை