செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு; 12 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா என்ற மசூதியில் திடீரென இன்று குண்டுவெடிப்பு ஒன்று நடந்துள்ளது. இதில், 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி காரி சயீத் கோஸ்டி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, 3 பேரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்புகள் பொறுப்பேற்ற பின்பு ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது