செய்திகள்

இடைக்கால பட்ஜெட்: பிரதமர் மோடி விவசாயிகளுக்கு பருத்தி சாக்லேட் கொடுத்துள்ளார் - குமாரசாமி குற்றச்சாட்டு

இடைக்கால பட்ஜெட்டில் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு பருத்தி சாக்லேட் கொடுத்துள்ளார் என்று கர்நாடக முதல்-மந்திரி குற்றம்சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இடைக்கால பட்ஜெட்டை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விவசாயிகளுக்காக பல மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நகலாகும்.

கர்நாடகாவில் விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக நாங்கள் அறிவித்தபோது, நான் மக்களுக்கு லாலிபாப் கொடுப்பதாக மோடி கூறினார். ஆனால் தற்போது பிரதமர் மோடி விவசாயிகளுக்கு பருத்தி சாக்லேட் கொடுத்துள்ளார்.

இந்த இடைக்கால பட்ஜெட்டை தயாரித்தது நிதியமைச்சகமா இல்லை ஆர்.எஸ்.எஸ். அமைப்பா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பட்ஜெட்டை பாஜகவின் நண்பர்கள் தயாரித்திருப்பார்கள்" என அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது