செய்திகள்

இயற்கை வேளாண்மையில் நச்சுத்தன்மையில்லாத விளைபொருட்களை உற்பத்தி செய்து அதிக லாபம் பெறலாம்

இயற்கை வேளாண்மையில் நச்சுத்தன்மையில்லாத விளைபொருட்களை உற்பத்தி செய்து அதிக லாபம் பெறலாம் என்று விதைச்சான்று மற்றும் அங்கச்சான்று உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்,

அங்கச்சான்று பெற்ற விவசாயிகளாக மாறினால் விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். மேலும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இயற்கை விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்பது முற்றிலும் அங்கக பொருட்களான இயற்கை எரு, பசுந்தாள் உரங்கள் மற்றும் பஞ்சகவ்யா ஆகியவற்றை கொண்டு மேற்கொள்ளும் விவசாய முறையாகும். இம்முறையில் ரசாயன பொருட்களான உரங்கள், களைகொல்லிகள், பூச்சி மருத்துகள் மற்றும் ரசாயன இடுபொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அதிக லாபம்

இயற்கை வேளாண்மை வழி முறைகளை பயன்படுத்தும் போது செலவுகள் குறைகிறது. மண் வளத்தை மேம்படுத்தி, நோய் தாக்குதல் இல்லாமல் பயிர்களை வளர்த்து அதிக மகசூல் பெறலாம். மத்திய, மாநில அரசும் இணைந்து அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இயற்கை வேளாண்மையில் நச்சுத்தன்மையில்லாத விளை பொருட்களை உற்பத்தி செய்து அதிக லாபம் பெறலாம். எனவே திருவாரூர் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை சான்று பெற விரும்பும் விவசாயிகள் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்