டெல்லி,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நவ்ஜோத் சித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மந்திரி பதவியில் இருந்து விலகினார். இதற்கிடையில் கடந்த மாதம் டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்ஷித் காலமானார். ஷீலா தீக்ஷித் மறைவால் காலியாக உள்ள டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
தற்போது டெல்லி காங்கிரஸின் தற்காலிக தலைவராக உள்ள பிசி சாக்கோ இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.