செய்திகள்

தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.

சென்னை

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கருணாஸின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த திட்டமானாலும் அதனை தமிழக அரசு எதிர்க்கும் .

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை . சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.