செய்திகள்

ஆரணி அருகே ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் பழமையான குளம் சீரமைக்கும் பணி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு

ஆரணி அருகே ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் பழமையான குளம் சீரமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

ஆரணி,

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட குளம், களம்பூர்-சந்தவாசல் சாலை பிரியும் இடத்தில் உள்ளது. அந்தக் குளம் 15-ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் குளம் பழமை மாறாதவாறு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணியை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், இந்தக் குளம் 15-ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டதாகும். அங்கு சிறிய பூங்கா, காபி சென்டர், ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட உள்ளது. பொழுதுப் போக்கு அம்சங்களும் ஏற்படுத்தப்படும். அதற்காக ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. மழைக்காலங்களில் மழைநீர் குளத்தில் சேரும் வகையில் அமைக்கப்படுகிறது, என்றார்.

கலெக்டர் மேலும் கூறுகையில், விவசாயிகள் ஏரி வண்டல் மண்ணை விவசாயத்துக்குக் கொண்டு சென்றால் விவசாயம் செம்மை பெறும். அதற்கு கட்டணம் தேவையில்லை. ஆனால் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துவதாகத் தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளில் 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக, சமூக வலைதளங்களில் சமூக தணிக்கை தகவல்கள் வந்துள்ளதே எனக்கேட்டதற்கு, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் மட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சமூக தணிக்கை செய்து அறிக்கை வெளியிட்டதில் மாவட்டம் முழுவதும் ரூ.9 கோடி வரை சரியான கணக்குகள் இல்லை எனக் குறிப்பிட்டார்கள், என்று தெரிவித்தார்.

அப்போது பயிற்சி கலெக்டர்கள் அனந்தமோகன், அமீத்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி, தாசில்தார் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.செந்தில்குமாரி, ஆர்.சுப்பிரமணி, முள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது ஆரணி காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் சாதிக்பாஷா, கலெக்டரிடம் தற்போது காய்கறி மொத்த விற்பனை கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. சில்லரை காய்கறி கடைகளை அங்குள்ள மார்கெட் வளாகத்திலேயே ஒரு வரிசைக்கு 20 கடைகள் வீதம் சுழற்சி முறையில் திறக்க உத்தரவிட வேண்டும், எனக் கோரிக்கை வைத்து மனு கொடுத்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை