செய்திகள்

எட்டயபுரம் அருகே, லாரி மீது கார் மோதியதில் மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதியதில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்து உள்ளது.

தினத்தந்தி

எட்டயபுரம்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தை சேர்ந்தவர் விஜி என்ற நந்தகுமார் (வயது 40). கூலி தொழிலாளியான இவர் அந்த பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் சிலருடன் ஒரு காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டார். காரை அதே பகுதியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர தொழிற்சங்க செயலாளர் ஜார்ஜ் பிராங்கிளின் (32) ஓட்டினார். காரில் மொத்தம் 8 பேர் இருந்தனர். நேற்று முன்தினம் காலையில் கார் எட்டயபுரம் அருகே கீழஈரால் நாற்கர சாலையில் வந்த போது முன்னாள் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜார்ஜ் பிராங்கிளின், நந்தகுமார் ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும் காரில் இருந்த வைத்தியநாதன் (48), பாலு (36), ராஜ் (36), சவுத்ரி (28), ரமேஷ் (40), செந்தில்குமார் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்து உள்ளது. மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது