செய்திகள்

காஞ்சீபுரம் அருகே டெம்போ-லாரி மோதல்; டிரைவர் சாவு

காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் அருகே செல்லும்போது அந்த வழியாக பால் ஏற்றி வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மினி டெம்போ மீது லாரி மோதியது.

காஞ்சீபுரம்,

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அலுமினிய பாத்திரங்களை ஏற்றி கொண்டு மினி டெம்போவை ஓட்டி சென்றார். காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் அருகே செல்லும்போது அந்த வழியாக பால் ஏற்றி வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மினி டெம்போ மீது லாரி மோதியது. இதில் மினி டெம்போ டிரைவர் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...