செய்திகள்

அணைக்கட்டு அருகே, அனுமதியின்றி செம்மண் அள்ளிய பொக்லைன் எந்திரம், 4 லாரிகள் பறிமுதல்

அணைக்கட்டு அருகே அனுமதியின்றி செம்மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் மற்றும் 4 லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணைக்கட்டு,

அணைக்கட்டை அடுத்த மலைசந்து மற்றும் மலையடிவாரத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளி லாரிகளில் கடத்தப்படுவதாக நேற்று அணைக்கட்டு வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அணைக்கட்டு தாசில்தார் பெருமாள் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது அதிகாரிகளை கண்டதும் மண் அள்ளி கொண்டிருந்த பொக்லைன் எந்திர டிரைவர் மற்றும் 4 லாரி டிரைவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மற்றும் 4 லாரிகளையும் பறிமுதல் செய்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி, பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் மற்றும் தப்பியோடிய டிரைவர் களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்