செய்திகள்

திருவள்ளூர் அருகே, முன்விரோதத்தில் மோதல்; 7 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் மோதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகேயுள்ள வயலாநல்லூரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி காஞ்சனா (வயது 45). இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த கோலப்பஞ்சேரியை சேர்ந்த வரதராஜ் என்கின்ற ராஜேஷ், விக்கி, பொன்னியின்செல்வன் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு காஞ்சனாவை தகாத வார்த்தையால் பேசி கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கியுள்ளனர்.

பதிலுக்கு காஞ்சனா தரப்பில் அவரது உறவினர்களான திலீப்குமார், மதி, பொன்னி, குமார் ஆகியோர் ராஜேஷ் மற்றும் விக்கி ஆகியோரை அடித்து உதைத்து கத்தியால் குத்தியுள்ளனர்.

இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த மேற்கண்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்