செய்திகள்

பானி புயல்: ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைப்பு

பானி புயல் காரணமாக ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ். முதலான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் நீட் (NEET UG) நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மே 5-ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில், பானி புயலால் ஒடிசாவில் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு கேட்டுக்கொண்டது.

இதை ஏற்று நாளை ஒடிசாவில் நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து