செய்திகள்

14 நாட்கள் சிறை: நெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்? ப.சிதம்பரம் கேள்வி

நெல்லை கண்ணனை ஏன் 14 நாட்கள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாட்கள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்?

இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும்.

பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில்,

பாகிஸ்தான் அஹமதியாக்கள், இலங்கை தமிழர்கள், பூட்டானிய கிறிஸ்தவர்கள், மியான்மரீஸ் ரோஹிங்கியாக்கள் உட்பட துன்புறுத்தப்பட்ட அனைவருக்கும் குடியுரிமை சட்டம் சமமாக பொருந்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது