செய்திகள்

ஜூலை 29-ம் தேதி வரை விமான சேவைகள் நிறுத்தம்: மம்தா பானர்ஜி உத்தரவு

மேற்கு வங்கத்திற்கான விமான சேவைகளை வரும் 29ம் தேதி வரை நிறுத்தி வைக்க அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

கொல்கத்தா,

இன்று முதல் மேற்கு வங்கத்திற்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கெரேனா தெற்று காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வரும் 29ம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்தி வைக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூலை 25 முதல் ஜூலை 29 வரை கொல்கத்தாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் எதுவும் இயங்காது என்று கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் இன்று அறிவித்தனர்.

ஜூலை 25 சனி முதல் ஜூலை 29 புதன்கிழமை மம்தா பானர்ஜி அரசு மாநில அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது, இந்த நாட்களில் மேற்கு வங்காளத்தின் எந்தவொரு விமான நிலையத்திலும் விமானங்கள் இருக்காது.

மேற்கு வங்க அரசு ஏற்கனவே மும்பை, புனே, நாக்பூர், டெல்லி, சூரத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் இருந்து வரும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, தற்போது ஜூலை 31 வரை இந்த தடையை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.