செய்திகள்

பீகாரில் என்பிஆர் பணிகள் மே 15 ஆம் தேதி தொடங்கும்; துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி

பீகாரில் என்பிஆர் பணிகள் மே 15 ஆம் தேதி தொடங்கும் என்று துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

பீகாரில் என்.பி.ஆர் பணிகள் மே 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அம்மாநில துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி தெரிவித்தார். இது தொடர்பாக சுஷில் குமார் மோடி கூறுகையில், 2020-ம் ஆண்டு தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதிவரை நடக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பீகார் மாநிலத்தில் மே 15-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை நடைபெறும்.

எந்த மாநில அரசும் என்பிஆர் செயல்படுத்த முடியாது என்று சொல்வதற்கு எந்த அதிகாரம் இல்லை. என்பிஆருக்கும், என்ஆர்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. என்ஆர்சி நாடு முழுவதும் அமலாகாது என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு