செய்திகள்

லால்குடி உள்ளிட்ட 5 தாலுகாக்களில் ரூ.1¼ கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள் வழங்கினர்

லால்குடி உள்ளிட்ட 5 தாலுகாக்களில் ரூ.1¼ கோடிக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

லால்குடி,

திருச்சி மாதாலுகா லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, தொட்டியம் ஆகிய தாலுகாக்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. லால்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய குழு தலைவர் சூப்பர் நடேசன், நகர செயலாளர் பூவாலூர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு 2,309 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 95 ஆயிரத்து 200 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

லால்குடி தாலுகா ஆங்கரை சரோஜா மஹாலில் நடைபெற்ற நிகழச்சியில் 936 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலும், துறையூர் பெருமாள் கோவிலில் நடைபெற்ற பாக்கிய லட்சுமி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறையூர் தாலுகாவை சேர்ந்த 514 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், முசிறி ஐ.எம்.ஏ.திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முசிறி தாலுகாவை சேர்ந்த 573 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 99 ஆயிரத்து 200 மதிப்பிலும், தொட்டியம் தாலுகாவை சேர்ந்த 283 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 2,309 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 95 ஆயிரத்து 200 மதிப்பில் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில்,அரசை தேடி மக்கள் அன்றாட குறைகளை கேட்டு வந்த நிலையை மாற்றி மக்களை தேடி அரசே கோரிக்கை மனுக்களை பெற்று விரைவாக முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.இம்முகாம் மூலமாக முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வாரிசுசான்று, பிறப்புசான்று, உழவர் பாதுகாப்பு அட்டை, அம்மா இரு சக்கர வாகனம், மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றனஎன்றார்.

அமைச்சர் வளர்மதி பேசுகையில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கிராமம், நகரம், பேரூராட்சி, நகராட்சி, மநகராட்சி என அந்தந்த வருவாய் கிராமங்களில் அனைத்துத்துறையை சேர்ந்த குழுக்கள் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்று தற்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 3 மாதங்களில் திருச்சி மாவட்டத்தில் 503 முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்கள் மூலம் 17,713 மனுக்கள் வரப்பட்டன. 9,982 மனுக்கள் ஏற்கப்பட்டன. இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க இந்த அரசுக்கு மக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்என்றார்.

நிகழ்ச்சியில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ராமன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பழனிதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், லால்குடி தாசில்தார் சத்தியபாலகங்காதரன், மண்ணச்சநல்லூர் தாசில்தார் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு