செய்திகள்

அமெரிக்கா ஜார்ஜ் பிளாயிட் சம்பவம் போல் லண்டனிலும் ஒரு நிகழ்வு போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

லண்டனில் கறுப்பினத்தவர் ஒருவரின் கழுத்தில் போலீசார் முழங்காலால் அழுத்துவதைக் காட்டும் காட்சிகள் வெளிவந்ததை தொடர்ந்து அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

லண்டன்

லண்டனில் இஸ்லிங்டன் பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோவில், இரண்டு அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கறுப்பினத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவரை நடைபாதையில் கழுத்தில் போலீசார் முழங்காலால் அழுத்துவதைக் காட்டும் காட்சி வெளியானது.

இந்த வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், வியாழன்று போலீஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, மாநகர துணை போலீஸ் கமிஷனர் சர் ஸ்டீவ் ஹவுஸ் இந்த காட்சிகள் மிகவும் வருத்தமளிப்பது என்றும் இது போலீஸ் கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டி மிரட்டியதாலேயே , அந்த 45 வயது நபரை கைது செய்ய முயன்றதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.சில நிமிடங்களுக்கு பின்னர் அந்த நபர் உட்கார வைக்கப்பட்டு, போலீசாருடன் அவர் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.கைது நடவடிக்கையின் போது அதிகாரிகள் பார்வையாளர்களால் எதிர்கொள்ளப்பட்ட நிலையில் பல போலீஸ் கார்கள் சம்பவ இடத்தில் குவிந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு