செய்திகள்

காஷ்மீர் மக்களை சந்திக்க தனி விமானம் வேண்டாம், சுதந்திரம் வேண்டும் -ராகுல்காந்தி

மக்கள் மற்றும் முக்கிய தலைவர்களை சந்திப்பதற்கான சுதந்திரத்தை ஏற்படுத்தி தந்தால் காஷ்மீருக்கு வர தயார் என காஷ்மீர் கவர்னருக்கு ராகுல் காந்தி பதில் அளித்து உள்ளார்.

புதுடெல்லி

ஜம்மு - காஷ்மீரில் வன்முறை நடப்பதாக, ராகுல் காந்தி கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அனைத்து மசூதிகளிலும் தொழுகை நடத்தப்பட்டது. இங்கு வந்து நிலைமையை பார்வையிட ராகுல்காந்திக்கு விமானம் அனுப்ப தயார் என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள ராகுல்காந்தி மக்கள் மற்றும் முக்கிய தலைவர்களை சந்திப்பதற்கான சுதந்திரத்தை ஏற்படுத்தி தந்தால் காஷ்மீருக்கு வர தயார் என்று கூறியுள்ளார்.

அன்புள்ள ஆளுநர் மாலிக், எதிர்க்கட்சித் தலைவர்களின் குழு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் வருகைக்கான உங்கள் அன்பான அழைப்பின் பேரில் நான் அவர்களை அழைத்துச் செல்வேன். எங்களுக்கு விமானம் தேவையில்லை, ஆனால் மக்களை பிரதான தலைவர்கள் மற்றும் எங்கள் தொண்டர்கள் அங்கு சந்திக்க சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் என கூறி உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்